There was an error in this gadget

Coming soon....

JEEVA RECOMAND HEROINE

Posted by sarjune Wednesday, 2 December 2009 0 comments

சிம்புவைப் பற்றிதான் அப்படி குறை கூறினார்கள். இப்போது ‌ஜீவாவையும். வேறொன்றுமில்லை, தான் நடிக்கும் படங்களில் ‌ஜீவாவின் தலையீடு அதிக‌ரித்திருக்கிறதாம். குறிப்பாக நடிகைகள் விஷயத்தில். தெனாவட்டுக்குப் பிறகு கச்சே‌ரி ஆரம்பம் படத்திலும் பூனம் ப‌ஜ்வா நடிப்பதற்கு இந்த தலையீடுதான் காரணமாம்.

இது உண்மையா?

'
நல்ல விஷயத்துக்காக தலையிடுறதில் தப்பில்லையே சார்' என்கிறார் ‌ஜீவா. என்னோட படத்துக்கு நான் பொறுப்பெடுத்துக்காம வேற யார் பொறுப்பு எடுத்துக்குவார்? தவறான விஷயத்துக்காக யாரையும் சிபா‌ரிசு செய்றதில்லை. அதேநேரம் கதைக்கு, கதாபாத்திரத்துக்கு, படத்தின் பட்ஜெட்டுக்கு யாருடைய சம்பளம் ஒத்து வருதோ அவங்களை சிபா‌ரிசு பண்றதில் தப்பில்லையே.

இயக்குனருடன் கலந்தாலோசித்து மட்டுமே இதுபோன்ற முடிவுகளை எடுப்பதாகவும் ‌ஜீவா தெ‌ரிவித்தார். ம்.. இதை அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்கள் சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்

அமீ‌ரின் யோகி மாஸ் ஹீரோக்களுக்கு‌ரிய ஓபனிங்கை பெற்றுள்ளது. கண்டேன் காதலை, நான் அவன் இல்லை, ஆதவன் படங்களை பின்னுக்கு தள்ளி சென்னை பாக்ஸ் ஆபிஸில் யோகி கைப்பற்றியிருக்கிறது.

5.
ஆதவன்

இந்த கே.எஸ்.ரவிக்குமார் பிராண்ட் கமர்ஷியல் மசாலா ஆறு வாரங்கள் முடிவில் 4.7 கோடிகள் வசூல் செய்துள்ளது. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல் 3.6 லட்சங்கள்.

4.
மத்திய சென்னை

சென்ற வாரம் வெளியான மத்திய சென்னை முதல் மூன்று தினங்களில் 5.7 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

3.
கண்டேன் காதலை

இந்த இந்தி ‌ரிமேக் தமிழ் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. நான்கு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 1.8 கோடிகள். சென்ற வார இறுதி வசூல் 7.6 லட்சங்கள்.

2.
நான் அவன் இல்லை

ீவன் நடித்திருக்கும் ப்ளேபாய் படம். நான்கு ஹீரோயின்களின் கிளாமருக்கு நல்ல வரவேற்பு. முதல் மூன்று தினங்களில் 21.52 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

1.
யோகி

முதல் அட்டெம்டிலேயே அமீருக்கு முதல் இடம். வன்முறை அதிகம், தென்னாப்பி‌ரிக்கா படத்தின் காப்பி போன்ற விமர்சனங்களை கடந்து திரையரங்குக்கு ரசிகர்களை படம் ஈர்க்கிறது. முதல் மூன்று நாள் வசூல் 23.35 லட்சங்கள்


Filmmaker Vikram Kumar, who is getting ready to direct Vikram for a film titled ‘24’, says his basic idea is not to work with established actors alone but it happens so based on the demands of the script.

“A big hero like Vikram is needed for ‘24’. Likewise, my earlier films ‘Yaavarum Nalam’ and ‘Alai’ too demanded actors like Madhavan and Silambarasan respectively,” says the director.
On ‘24’, he says, “it is not a story that happens in 24 hours. It is a humour film loaded with romance, fantasy and action. In other words, it is also a science fiction. The movie will show a different face of Vikram.”
Heaping laurels on Vikram, he says, “he expressed interest to be part of the project as soon as I narrated him the storyline. I am thrilled to work with him.”

யோகி REVIEW

Posted by sarjune Tuesday, 1 December 2009 0 comments


யோகி
ரவுடியின் குழந்தை பாசம்
நடிப்பு: அமீர், மதுமிதா, சினேகன், சுவாதி, வின்சென்ட் அசோகன், கஞ்சா கருப்பு.
தயாரிப்பு: டீம் ஒர்க் புரொடக்ஷன் ஹவுஸ்.
இசை: யுவன் சங்கர் ராஜா.
இயக்கம்: சுப்ரமணியம் சிவா.

ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் அவனது சூழலே தீர்மானிக்கிறது. கொடுமைக்கார அப்பாவால் ரவுடியாகும் ஒருவனின் குற்றத்தையும் அவனது சூழலையும் நேர்மையாகச் சொல்லியிருக்கிறது ‘யோகி’. திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன் என சமூகத்தின் எல்லை மீறும் கேரக்டரில் அமீர். வழக்கம் போல நண்பர்களுடன் கொள்ளையடித்துவிட்டு வரும் வேளையில், துரத்துகிறது போலீஸ். தப்பிக்கும் ஓட்டத்துக்கிடையே காரை கடத்தும் யோகிக்கு, அதற்குள் தத்தளிக்கும் குழந்தையை, வளர்க்க நேரிடுகிறது. குழந்தையை தேடும் அதன் அம்மா, குழந்தையை கொலை செய்ய சொல்லும் அவளது கணவன், தாதா, தாய்ப்பாலுக்காக மிரட்டப்படும் பெண், போலீஸ் சடுகுடு... இந்த ஏரியாவுக்குள் கபடியாடும் கதையின் முடிவு சென்டிமென்ட் டச்!

இயக்குனர் அமீர், யோகியாக ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். அவருக்காக, செதுக்கப்பட்ட கதையாகி இருக்கிறது படம். ஓடும் பஸ்சில் குடிகாரனின் பணப்பையை பறித்துக்கொண்டு கழுத்தை அறுக்கும் ஆரம்ப காட்சியே, யோகியின் கேரக்டரை தீர்மானித்து விடுகிறது. ஓட்டலில் கொள்ளையடித்துவிட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை சுடுவது, காரில் தப்பிக்கும் போது, உள்ளிருக்கும் குழந்தை சத்தம் கேட்டதும் பதறுவது, கொஞ்சம் தவித்து, அதை தூக்கிக்கொண்டு செல்வது, குழந்தைக்காக, தன்னை மாற்ற தயாராவது, தாய்ப்பாலுக்காக, மதுமிதாவை மிரட்டுவது என ஒவ்வொரு காட்சியிலும் கேரக்டராகவே மாறியிருக்கிறார் அமீர். குழந்தையின் அழுகையை நிறுத்த அவர் போடும் டான்ஸ் ரசனை. ஆக்ஷன் காட்சிகளில் மெனக்கெட்டிருக்கிறார்.

அமீரின் நண்பராக வந்து அவர் துப்பாக்கியாலேயே உயிர் விடும் ரவுடியாக சினேகன். ‘சின்ன சின்னதா பண்ணி அலையுறதை விட, பெரிசா பண்ணி செட்டிலாகலாம்னு ஐடியா வச்சிருக்கேன், இந்த குழந்தையை தேடணும்’ என்று அமீர் வளர்க்கும் குழந்தையின் போட்டோவை காண்பிப்பதும், குழந்தையின் வீட்டுக்கு சென்று, அதை கொல்வேன் என்று ஏகத்தளமாக பேசும்போது லோக்கல் ரவுடியாகியிருக்கிறார். அமீரின் தோட்டாவில் பொசுக்கென்று உயிர் விடும் போது பரிதாபம். கணவன் கைவிட, குழந்தையுடன் பொம்மை விற்று வாழும் கேரக்டர் மதுமிதாவுக்கு. ஒவ்வொரு முறையும் அமீர், அவரை இடித்துவிட்டுப் போக, பொம்மை கூடை, தண்ணீர் குடம் எல்லாமும் உடையும் போது குபுக். ‘இந்த குழந்தை உன்னோடதா, அம்மா செத்து போயிட்டாங்களா?’ என்று அப்பாவியாக கேட்க, ‘இது என் குழந்தை இல்லை‘ என்று அமீர் சொல்ல, மதுவின் முகத்தில் தெரியும் அந்த தவிப்பும் பயமும் நச்! அமீருக்கும் அவருக்குமான மவுன காதல் சுகமான கவிதை.

குழந்தையை பாம்பு சுற்றுவது, கொத்து கொத்தாக எறும்புகள் குழந்தையை கடிப்பது என ரிஸ்க்கான காட்சிகளில் தெரிகிறார் இயக்குனர் சுப்ரமணியம் சிவா. ப்ளாஷ் கட்டில் வந்துபோகும் அமீரின் சின்ன வயது வாழ்க்கை திடுக். அவரது அப்பாவாக வரும் தேவராஜ், கொடூரத்தின் உச்சிக்கு சென்றிருக்கிறார். போட்டோகிராபர் கஞ்சா கருப்பு, ‘நம்ம அல்டிமேட் ஸ்டாருல்ல, அதான் நம்ம தல அஜீத்து, இந்த கேமராவுல வந்துட்டுதான் சினிமா கேமரா முன்னால நின்னாக’ என்று விடும் புருடாவில் சிரிக்கிறது தியேட்டர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்வண்ணன், குழந்தையை தேடி அழும் ஸ்வாதி, திருநா என்ற ஏரியா தாதா கஸாலி என அனைவரும் கேரக்டருக்கேற்ற தேர்வு. யுவனின் இசை கதையோடு பயணிப்பது பிளஸ். ஆர்.பி.குருதேவ், கே.தேவராஜின் கேமரா சந்துபொந்துக்குள் அலைந்து திரிகிறது. முதல் பாதியில் வேகமாக செல்லும் கதை, அடுத்து சென்டிமென்டுக்குள் சிக்கிக்கொள்கிறது. ஒரு காட்சி முடிந்ததுமே அடுத்த காட்சியை யூகிக்க முடிவது, எந்த காட்சியும் மனதில் பதியாதது மைனஸ்.

kamal poet about eelam

Posted by sarjune Saturday, 28 November 2009 0 comments

ஈழத்தின் சோகம் குறித்து போருக்கெதிரான பத்திரிகையாளர்கள் வெளிக் கொணர்ந்துள்ள மௌனத்தின் வலி என்ற நூலில் கமல்ஹாசன் ஒருகவிதை [^] எழுதியுள்ளார்.

அந்தக் கவிதை...

காக்க ஒரு கனக (AK) 47
நோக்கவும் தாக்கவும் ஒரு நொடி நேரம்
தோற்கவும் அதே கண நேரம்தான்
ஈயம் துளைத்துக் கசிந்து சிவந்த
காயம் தொட்டுக் கையை நனைத்து
விண்ணே தெரிய மண்ணில் சாய்ந்தேன்
முன் காக்க மறந்த அமைதியைக் காத்து.
மாட்டுத் தோலில் தாய்மண் அறைபட
பூட்ஸுக் கால்களால் கடந்தனர் பகைவர்.
விட்ட இடத்தில் கதையைத் துவங்கச்
சட்டென இன்னொரு குழந்தை [^] பிறக்கும்
அதுவரை பொறுத்திரு தாயே, தமிழே
உதிரம் வடியும் கவிதை படித்

அரசியல் டென்ஷனைக் குறைத்துக் கொள்ள தற்காலிகமாக மீண்டும் சினிமாவில் இறங்கியுள்ளார் விஜய்காந்த் [^]. இந்த முறை ஸ்டார்ட்... கேமிரா... ஆக்ஷன் சொல்லப் போகிறவர்... சாட்சாத் விஜய்காந்தேதான்.

அவரது மச்சான் சுதீஷ் தயாரிக்கிறார் இந்தப் படத்தை. விஜய்காந்த் முதல் முறையாக இயக்குநர் [^] அவதாரம் எடுக்கிறார். படத்துக்குப் பெயர் விருதகிரி.

இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னை [^] சைதாப்பேட்டையில் உள்ள ரேகா ஹவுஸில் படப்பிடிப்புடன் நடந்தது. வழக்கம்போல இந்தப் படத்திலும் கடமையே தவறாத நல்ல போலீஸாக நடிக்கிறார் விஜய்காந்த்.

விஜய்காந்துக்கு கலைராணி ஆரத்தி எடுப்பது போல முதல்காட்சி படமாக்கப்பட்டது (செண்டிமெண்டுங்னா!). உடன் மீரா கிருஷ்ணன் போன்றவர்கள் நடித்தனர்.

இப்படத்துக்கு எஸ்.கே. பூபதி ஒளிப்பதிவு செய்ய சுந்தர் சி.பாபு இசையமைக்கிறார். பிஆர்ஓ சிங்கார வேலு.

தான் எம்எல்ஏவாக வென்ற விருத்தாச்சலம் தொகுதியின் பெயர் வருவதுபோல இந்தப் படத்துக்கு விருதகிரி என்று பெயர் சூட்டியிருக்கிறாராம் கேப்டன் 

எந்த படமும் ஓடாத ததால விஜய் காந்தஐ வைத்து யாரும் தயாரிக்க,இயக்குனரும் முன் வரல அதெலாம்  தன இந்த முடிவு என்கிறது கோலிவுட்....


ஆடையின் அளவு குறையக் குறைய சம்பளம் உயரும் என்பது தமிழ் சினிமா விதி. இந்த விதிக்குத் தப்பாத நாயகிகளே கிடையாது... கேபி சுந்தராம்பாள் தவிர!

பக்கத்து வீட்டுப் பெண் இமேஜை கட்டிக் காப்பதில் குறியாக இருந்த சினேகவுக்கு இந்த உண்மை புரியத் துவங்கியதுமே, அவரது ஆடையின் அளவும் குறையத் தொடங்கிவிட்டது.

தெலுங்கில் ஹாட் ஸ்னேகாவாக வலம் வந்தவர், அதே தரிசனத்தை தமிழில் காட்டத் துவங்கிவிட்டார்.

இதனாலேயே, பெரிய வெற்றிப் படம் எதிலும் நடிக்காவிட்டாலும், அவரது சம்பளமும் குறையாமல் இருந்து வருகிறது.

இப்போது வரவிருக்கும் கோவா படத்தில் பிகினியில் வலம் வருகிறாராம் ஸ்னேகா. இதற்காக அவருக்கு பெரிய சம்பளம் தரப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த ஸ்டில்களை ஆரம்பத்தில் பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தக் கூடாது என கூறிவந்தவர், இப்போது பரவாயில்லை பயன்படுத்துங்க என்று தாராள அனுமதி தந்துவிட்டாராம்.

ஒரு பக்கம் படத்துக்கு பப்ளிசிட்டி... மறுபக்கம் தனது சம்பளத்தை உயர்த்த ஒரு டெக்னிக் என்ற உண்மை புரிந்ததால் இந்த திடீர் தாராளமாம்!

sneha in bikini first on net ,homely sneha now bikni sneha






Prabhu Deva starrer VIP is a film that is remembered till now as director S.T. Saba Rathinam’s work. After the forgetful ‘Punnagai Poove’ and ‘A Aa E Ee’, the director is making his come back with almost a hush-hush.
Director Saba is almost done with his upcoming project titled as ‘16’. The film has stars RJ-turned-actor Mirchi Siva of ‘Chennai 600028’ and ‘Saroja’ fame alongside newcomer Madhu Shalini as his lady love.
The music of ‘16’ will be scored by Mirchi Siva’s close friend Yuvan Shankar Raja. The film is said to have four songs, out of which, one will be sung Yuvan’s bro, Karthik Raja. After Yuvan is back from his Dubai concert the film’s work will come to an end.
‘16’ the debut production of Passion Movie Makers will be hitting the theaters sharp on Valentines Day (February 14th).



நடிப்பு: ஜீவன், மயில்சாமி, லட்சுமி ராய், ஹேமமாலினி, ரச்சனா, ஸ்வேதா மேனன்
இசை: டி இமான்
தயாரிப்பு: நேமிச்சந்த் ஜபக், ஹிதேஷ் ஜபக்
இயக்கம்: செல்வா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

2007-ல் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் இது. இம்மி கூட மாறாமல் அதே கதை... பார்முலா!

முதல் பாகத்தில் இந்தியாவில் பெண்களை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடும் கதாநாயகன், இந்த இரண்டாவது பாகத்தில் கவர்ச்சியும் திமிரும் நிறைந்த நான்கு இளம் பெண்களை விதவிதமாக ஏமாற்றுகிறான், ஒரு நல்ல பெண்ணுக்கு உதவ.

கடைசியில் மாட்டிக் கொள்ளும்போது, ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் பாதிரியார் வேடத்தைப் போட்டுக் கொண்டு 'நான் அவன் இல்லை' என்று வழக்கமான டயலாக்கை உதிர்த்துவிட்டு எஸ்கேப்பாகிறான். அடுத்த பாகத்தில் இன்னும் நான்கைந்து பெண்களுடன் கடலை போட வசதியாக முற்றும் என்று போட்டு முடிக்கிறார்கள் படத்தை!

இதற்குமேல் கதை என்று சொல்ல ஒன்றுமில்லை படத்தில்.

திரும்பத் திரும்ப எடுக்கப்படும் கதைகளைக் கூட, திரைக்கதை அழுத்தமாக இருந்தால் பெரிய வெற்றிப் படமாக்க முடியும். முதல் பாகத்தில் இதை நிரூபித்த இயக்குநர், இந்த இரண்டாம் பாகத்தில் சறுக்கியிருக்கிறார்.

இந்த மாதிரி படங்களின் ஒரே நோக்கம் அதிகபட்ச கவர்ச்சி... வக்கிரம். அதை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார் செல்வா.

படத்தில் சில காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின் மார்பில் கைவைத்து, 'மார்பாலஜி' ட்ரீட் தருகிறார் - இதற்குப் பேருதவி புரிகறது வாலியின் வாலிப வரிகள். உடனே கர்ச்சீப் எடுக்கிறார்கள் ரசிகர்கள், வாயைத் துடைக்க!

ஆனாலும் இந்த வாலி எபிசோட் சுவாரஸ்யமாக இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

லட்சுமி ராயை ஏமாற்ற ஜீவன் போடும் திட்டங்கள் அடேங்கப்பா ரகமாக இருந்தாலும், அதை 'அட இவ்ளோதானா' என்று சிம்பிளாக எடுத்திருப்பதில் நம்பகத்தன்மை மிஸ்ஸிங்.

தமிழ்நாட்டுப் போலீஸைத்தான் கேணத்தனமாக சினிமாவில் காட்டுகிறார்கள் என்று பார்த்தால், வெளிநாடுகளில் போலீஸ், சட்டம் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதற்கான அறிகுறியே இந்தப் படத்தில் இல்லை. கோடி கோடியாக ஏமாற்றுகிறார் நாயகன். ஜஸ்ட் லைக் தட் 'நான் அவனில்லை' என்று கூறிவிடுகிறார். இவரைப் பிடிக்க தமிழ்நாட்டிலிருந்து ஐரோப்பா போகும் போலீசும், அதைக் கேட்டுக் கொண்டு மண்டையை ஆட்டியபடி சென்னைக்குத் திரும்புகிறதாம்... அட போங்கப்பா!

ஹேமமாலினி என்கிற ஸ்ருதி பிரகாஷை ஜீவன் ஏமாற்றும் காட்சிகளில் சென்சார் தூங்கி விட்டார்கள் போல!

இந்த மாதிரி பாத்திரங்களில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார் ஜீவன் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு பக்காவான பக்க வாத்தியம் மயில்சாமி.

வாங்கிய பணத்துக்குக் குறைவில்லாமல், கவர்ச்சி காட்டியிருக்கிறார்கள் நான்கு நாயகிகளும். ஐந்தாவது நாயகியாக வரும் சங்கீதாவுக்கு பெரிதாக வேலையில்லை.

பாடல், பின்னணி இசை இரண்டுமே சொதப்பல். ஒளிப்பதிவு பரவாயில்லை.

முன்பெல்லாம் அண்டா நிறைய பாலில் சில சொட்டு விஷம் கலப்பார்கள், மசாலா என்ற பெயரில். இப்போது நிலைமை தலைகீழ். நீங்களாகப் பார்த்து பாலை அடையாளம் காண வேண்டும். இந்தப் படமும் அந்த ரகம்தான்!

greedy tammnah

Posted by sarjune 0 comments

'வெள்ளைக் கரப்பான்பூச்சி' என்று திரையுலகினரால் செல்லமாக (!?) அழைக்கப்படும் தமன்னாவுக்கு நன்கு நடிக்க வருகிறதோ இல்லையோ... வாய்ப்புகள் எக்கச்சக்கமாய் குவிகின்றன.

ஜெயம் ரவி, விஜய் என முன்னணி நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து வாய்ப்பு என்பதால் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திவிட்டாரம் அம்மணி.

இதுவரை ரூ.55 லட்சம் வரை வாங்கிக் கொண்டிருந்தவர், சுறா படத்தில் நடிக்க ரூ. 1 கோடி சம்பளம் பேசியுள்ளார். ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்துக்கும் இதேதான் சம்பளமாம்.

பையா படத்தில் குறிப்பிட்ட தொகைக்கு முதலில் ஒப்புக் கொண்ட தமன்னா, இப்போது 'என் ரேஞ்சுக்கு அது ரொம்ப குறைச்சலாச்சே' என்று ரொம்ப பீல் பண்ணுகிறாராம். அதனால் லிங்குசாமியிடம், என்னுடைய இப்போதைய ரேட்டைக் கொடுக்க முயற்சி பண்ணுங்க என்று கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளாராம்.

இந்த நேரம் பார்த்து அவருக்கு கமல்  பட வாய்ப்பு வேறு வந்திருப்பதால், சம்பள வரம்பை 1 கோடியுடன் நிறுத்தலாமா... இன்னும் உயர்த்தலாமா என ஆலோசித்து வருகிறாராம்.

இன்னொரு பக்கம், 'மார்க்கெட்டில் பரபரவென இருக்கும் போதே ஒரு விருதை வாங்கிப் போட்டாதான் ஆச்சு' என அவரது அபிமானிகள் சில ஆலோசனை சொல்லிவிட்டதால், "இந்தப் படத்துல எனக்கு விருது கிடைக்கும்ங்கற ஹோப் இருந்தா, சம்பளத்துல கன்செஷன் தர்றேன்" என்று புதிதாய் கதை சொல்லும் இயக்குநர்களிடம் தூண்டில் வீசுகிறாராம்


கௌதம் இயக்கிவரும் விண்ணைத்தாண்டி வருவாயா, சென்னையில் ஒரு மழைக்காலம் இரண்டுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கௌதம் - ஹா‌ரிஸ் ஜெயரா‌ஜ் பி‌ரிவுக்குப் பிறகு நடந்த மாற்றம் இது.

பொதுவாக ஒரு இயக்குனரும், இசையமைப்பாளரும் பி‌ரியும்போது இடையில் மாட்டிக் கொள்கிறவர், பாடலாசி‌ரியர். செல்வராகவன் இயக்கிய அனைத்துப் படங்களுக்கும் பாடல்கள் எழுதியவர் நா.முத்துக்குமார்.

செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜாவுடன் சண்டையிட்டு பி‌ரிந்த போது நா.முத்துக்குமாருக்கும் கல்தா கொடுக்கப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஒரு பாடல் கூட நா.முத்துக்குமார் எழுதவில்லை.

ஹா‌ரிஸ் - கௌதம் பி‌ரிந்த பிறகு அவர்கள் காம்பினேஷனில் பாடல் எழுதும் தாமரை ஓரங்கட்டப்படுவாரோ என பலரும் அச்சப்பட்டனர்.

ஆனால் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் அனைத்துப் பாடல்களையும் ரஹ்மான் இசையில் எழுத தாமரைக்கு வாய்ப்பு அளித்திருக்கிறார் கௌதம். அதாவது இசையை மாற்றியவர், வார்த்தையை மாற்றவில்லை.

ஹா‌ரிஸ் இசையமைக்கும் படங்களுக்கும் வழக்கம்போல தாமரை பாடல்கள் எழுதி வருவது ஆரோக்கியமான விஷயம்.


விஜய் படத்தில் மாறாத விஷயங்கள் என்று சில உண்டு. அதில் முக்கியமானது சண்டைப் பயிற்சியாளர் பெப்சி விஜயன். 

விஜய்யின் பெரும்பாலான படங்களுக்கு பெப்சி விஜயன்தான் சண்டைக் காட்சிகள் அமைத்திருக்கிறார். ஆனால், வேட்டைக்காரனிலிருந்து இந்த காம்பினேஷன் மாறுகிறது. விஜயனின் இடத்தை கனல் கண்ணன் பிடித்திருக்கிறார்.

வேட்டைக்காரனில் கனல் கண்ணன் அமைத்த சண்டைக் காட்சிகள் திருப்திகரமாக இருந்ததால் சுறா படத்திலும் அவரையே ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். 

ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் விஜய், வில்லன் தேவ் கில்லுடன் மோதும் காட்சியை கனல் கண்ணன் அமைத்திருந்தார். தொடர்ந்து இனி விஜய் படங்களுக்கு கனல் கண்ணனே ஸ்டண்ட் மாஸ்டராக பணிபு‌ரிவார் என்கிறார்கள்.

ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்ப‌ரில் மீண்டும் கேரளாவுக்கு செல்கிறது சுறா யூனிட்

VIJAY IMPRESS WITH KANAL KANNAN

Posted by sarjune Wednesday, 25 November 2009 0 comments



Shoot of Vijay’s ‘Sura’ is up and running in Hyderabad from November 15th onwards. Director S P Rajakumar is busily wielding megaphone for the stunt sequences between Vijay and his villain Dev Gill. Scenes in which Vijay meets the villain face-to-face in his den were also shot.
It’s was FEFSI Vijayan who did stunt choreography to most of Vijay’s movies all these days. But, from ‘Vettaikkaran’ Kanal Kannan has taken the task. It’s said that Vijay was very much impressed with stunt master Kanal Kannan’s technical knowledge. Sources close to the actor confirm that Vijay will henceforth work with the new master as a minimum for 10 films.
Sura’s shoot is expected to be wrapped-up by November 28th and resume in Kerala by December 5th.
As per speculations ‘Sura’ produced by Sangili Murugan will be releasing around June 22, 2010 for Ilaya Thalapathy’s birthday!



This Pongal is Thala Pongal for Ajith fans. The Ultimate star’s landmark project is almost over and done with it’s shoot. Recently, Asal’s dubbing schedule took off in Four Frames Preview Theatre with a simple Pooja.
Sources said that yesterday an important scene for the film was shot in Nadigar Thilagam Sivaji Ganesan’s house in T. Nagar, Chennai. Following this a song that features Ajith and Bhavana is being shot at the AVM Studios today.
While the patchwork of the film is planned to be carried out from now on, we have got to hear that ‘Asal’ team will be making a press meet soon. Industry sources had it that a formal press meet is likely to be arranged on December 15th, 2009. However official announcements are yet to be made.
Let’s play the waiting game until we hear more spicy updates from the ‘Asal’ camp!

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதல் முறையாக ஒரு மலையாள டப்பிங் படம் கௌரவமான இடத்தைப் பிடித்திருக்கிறது. அது பழசிராஜா என்று சொல்லத் தேவையில்லை.

4. 
பேராண்மை
ஜனநாதனின் படம் நான்காவது இடத்தில் உள்ளது. படத்துக்கு கிடைத்த பாராட்டுடன் ஒப்பிடுகையில் கலெ‌க்சன் கம்மிதான். ஐந்துவார இறுதியில் 2.42 கோடிகளை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதி வசூல், 7 லட்சங்கள்.

3. 
ஆதவன்
விளம்பரங்களின் வெளிச்சத்தில் இதுவரை 4.55 கோடிகளை வசூலித்திருக்கிறது இந்த கமர்ஷியல் மசாலா. சென்ற வார இறுதி வசூல் 8 லட்சங்கள்.

2. 
பழசிராஜ
இந்த டப்பிங் படம் முதல் மூன்று தினங்களில் 14.4 லட்சங்களை வசூலித்து விநியோகஸ்தர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. தொடர்ந்து இந்த வசூலை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது ரசிகர்களின் கையில் இருக்கிறது.

1. 
கண்டேன் காதலை
இந்தி ‌ரீமேக்கான கண்டேன் காதலை தொடர்ந்து முதலிடத்தில். சந்தானத்தின் காமெடியும், தமன்னாவின் கேரக்டரும் படத்தின் சத்தான பகுதிகள். மூன்று வார முடிவில் 1.55 கோடிகைளை வசூலித்திருக்கும் இப்படம், சென்ற வார இறுதியில் 17.5 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை யோகி, மத்திய சென்னை, நான் அவன் இல்லை இரண்டாம் பாகம் .ஆகியவை வெளியாவதால் பாக்ஸ் ஆஃபிஸில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்

TABDIV

Subscribe via email

Sms Update

Gallery

share & subscribe this

Installed by sarjune

Gallery>>

Search This Blog

Loading...

Labels

About Me

My Photo
sarjune
this website for pure vijay fans, hai friend I AM SARJUNE CONTACT ME: onlinevijayfans@yahoo.com
View my complete profile

Blogger templates

back to top